INFORMATION SHEET

THIS INFORMATION SHEET IS FOR THE PARTICIPANTS OF THE LCOM-R PROJECT. IT EXPLAINS THE PROJECT AND TELLS ALL WHAT YOU NEED TO KNOW TO GIVE CONSENT FOR PARTICIPATION IN THE PROJECT. INFORMATION SHEET IS GIVEN IN ALL THE THREE LANGUAGES. මෙම තොරතුරු පත්‍රිකාව LCOM-R ව්‍යාපෘතියේ සහභාගිවන්නන් සඳහා වේ. එය ව්‍යාපෘතිය පැහැදිලි කරන අතර ව්‍යාපෘතියට සහභාගී වීම සඳහා කැමැත්ත ලබා දීමට ඔබ දැනගත යුතු සියල්ල කියයි. තොරතුරු පත්‍රිකාව සියලුම භාෂා තුනෙන්ම ලබා දී ඇත. இந்தத் தகவல் தாள் LCOM-R திட்டத்தில் பங்கேற்பவர்களுக்கானது. இது திட்டத்தை விளக்குகிறது மற்றும் திட்டத்தில் பங்கேற்க சம்மதிக்க நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் சொல்கிறது. தகவல் தாள் மூன்று மொழிகளிலும் வழங்கப்படுகிறது.

3. தமிழ்

இணைப்பு 1

தகவல் தாள்

நான் வைத்தியர். காமினி நவரத்ன. தேசிய பல் மருத்துவ நிறுவனத்தில் சேவை புரிகிறேன். எனது தற்போதய பதவியானது, வாய்வழி மற்றும் மாக்ஸிலோ பேஷியல் சத்திர சிகிச்சை A  பிரிவின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் முதுகலை மருத்துவ பட்டதாரிகளின் பயிற்றுவிப்பாளரும் ஆகும். கொழும்பிலுள்ள பல் மருத்துவ நிறுவனத்தில் இலத்திரனியல் படுக்கை தலைச்சீட்டு (eBHT) திட்டத்தை அமுல்படுத்துவதற்கான சாத்தியக்கூற்றை கற்பதற்காக  "இலங்கை மருத்துவமனைகளுக்கான இலத்திரனியல் படுக்கை தலைச்சீட்டு (eBHT)" என்னும் தலைப்பிலான ஆராய்ச்சியில் - நீங்களும்  பங்குகொள்ள நான் இத்தால் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.  இவ் ஆய்வினை இலங்கையின், கொழும்பு வார்ட் பிளேஸ் இல் உள்ள பல் மருத்துவ நிறுவன A பிரிவை சேர்ந்த வைத்தியர் காமினி நவரத்ன, சந்தன ஜயசுந்தர, ஆனந்த பெரேரா, மற்றும் பேராசிரியர் ஜென்னிபர் பெரேரா என்போர் மேற்கொள்கின்றனர். இவ் ஆய்வின் நோக்கமானது இலத்திரனியல் படுக்கை தலைச்சீட்டு முறைமையை எனது வார்டில் அமுல்படுத்துவதற்கான சாத்திய கூறு உள்ளதா என்பதை மதிப்பிடுவதாகும்.

இந்த ஆய்வில் உங்கள் பங்குபற்றுதலானது முற்றிலும் தன்னார்வமானது. இவ் ஆய்விற்கு முற்றிலும் பங்கு பெறாமல் இருப்பது  அல்லது நீங்கள் விரும்பும் எந்த சந்தர்ப்பத்திலும் ஆய்விலிருந்து வெளியேறுதல் என்பன குறித்து தீர்மானமெடுத்தலில் உங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு.  அப்படி செய்வதால் உங்களுக்கான மருத்துவ பராமரிப்பு/ சிகிச்சைகள் அல்லது உங்களுக்கு உரித்தான எந்தவொரு விசேட சலுகைகளும் இழக்கவோ நிறுத்தவோ பட மாட்டாது. ஆய்வில் பங்கு பெறாமல் விடுதல் அல்லது ஆய்விலிருந்து இடை நிறுத்தி கொள்ள நீங்கள் விரும்பும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தீர்மானமெடுக்க முடியும். அதற்கென எந்தவொரு விளக்கமும் வழங்கப்பட வேண்டிய அவசியம் இல்லை.

நீங்கள் எனது பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்ற காரணத்தினாலேயே நீங்கள் இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்டீர்கள்.

இந்த ஆய்வில் பங்கேற்பதாக ஒப்புக் கொள்வதன் மூலம் உங்கள் வழக்கமான கவனிப்புக்கு தேவையான  நேர்காணலுக்கு நீங்கள் உட்படுத்தப்படுவீர்கள். உங்களின் தனிப்பட்ட விபரங்கள் கிளவுட் அடிப்படையிலான கணினி அமைப்புகளில் மின்னணு முறைமையில் சேகரிக்கப்படும். மேலும் இந்த ஆய்வு கிட்டத்தட்ட 1 வருட காலம் தொடரும். நீங்கள் வார்டில் இருந்தபோது நான் ஏதேனும் பரிந்துரைகள் செய்திருப்பின் அதற்கான குறுஞ் செய்திகள், சந்திப்புகள் மற்றும் மருந்து மீள் நிரப்பல் தொடர்பான விழிப்பூட்டல்களை நீங்கள் பெற்று கொள்வீர்கள்.

 

இந்த ஆய்வில் பங்கு பற்றுவதால் உங்களுக்கு கீழ்காணும் பலன்கள் கிடைக்கும்: வார்டில் உள்ள உத்தியோகத்தர்களுடனான ஆவணங்கள், பின் தொடர்வதற்கான நினைவூட்டல்கள், உங்கள் உத்தரவுக்கிணங்க பரிசோதனை கூட ஆய்வுகள், உங்கள் உத்தரவுக்கிணங்க மருந்து பரிந்துரைப்புகளுக்கான நினைவூட்டல்கள், மருந்து மீள் நிரப்பல்களுக்கான நினைவூட்டல்கள் (நீங்கள் கலந்தாலோசிக்கும் எந்த ஒரு மருத்துவருக்கும் நீங்கள் தற்போது உட்கொள்ளும்/ தொடரும் மருந்து வகைகளின் பட்டியலைகளை காண்பித்தல்

 

இந்த ஆய்வில் பங்கேற்பதால் நீங்கள் எந்தவொரு மருத்துவ, அறுவை சிகிச்சை அபாயங்கள் அல்லது ஆபத்துகளுக்கு உட்படுத்தப்பட மாட்டீர்கள். உங்களுக்கான ஒரே ஆபத்து உங்களின் தனிப்பட்ட மற்றும் இரகசிய தரவுகள் ஆகும். ஆய்வின் முதன்மை ஆய்வாளர் என்ற வகையில் உங்களின் அனைத்து தனிப்பட்ட, இரகசிய தகவல்களை பாதுகாக்க தேவையான அணைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நான் எடுத்துள்ளேன்.  தனிநபர்  சுகாதார தகவலுக்கான சர்வதேச பாதுகாப்பு வழிகாட்டுதல்கள், சுகாதார பாதுகாப்பு அமைச்சகத்தின் தனிநபர் சுகாதார தகவலுக்கான வழிகாட்டல்கள் என்பவற்றை எப்போதும் பின்பற்றுவதுடன் எப்போதும் தானாக புதுப்பிக்கப்படும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப கட்டமைப்பு பாவனை, மற்றும் கொழும்பு 4 பம்பலபிட்டிய,ரிட்ஜ்வே பிளேஸிலுள்ள தொழிநுட்ப அலுவலகத்தின் தொழில் தரத்திலான இணைய பாதுகாப்பு நிலைகள் மற்றும் பாதுகாப்பு கொள்கையின் ஆவணப்படுத்தல் என்பவற்றை எப்போதும் உறுதி செய்கிறோம்.

 

இந்த ஆய்வில் பங்குபெறுவதால் நீங்கள் எந்த ஒரு கொடுப்பனவையும் பெற மாட்டீர்கள்.

அனைத்து ஆய்வு பதிவுகளின் இரகசியத்தன்மைக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். அனாமதேய தரவு மட்டுமே வெளியிடப்படுவதுடன் உங்களை அடையாளம் காணக்கூடிய எந்தவொரு தகவலும் வெளியிடப்படமாட்டாது. வெளியிடப்படும் தகவல்களில் உங்களை இனங்காணக்கூடிய எந்தவொரு விடயமும் உங்களின் அனுமதியின்றி வெளியிடப்படமாட்டாது. சில பத்திரிகைகள் ஆய்வு தகவல்கள் ஏனையோருக்கும் கிடைக்க வேண்டும் என கருதுவதால் அடையாளம் காணக்கூடிய தகவலன்றி ஏனைய தகவல்கள் ஏனைய ஆய்வாளர்களுடன் பகிரப்படும்.

 

நீங்கள் விரும்பும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நீங்கள் இந்த ஆய்விலிருந்து வெளியேறலாம்.அதற்காக எந்தவொரு தண்டப்பணமோ, மருத்துவ சிகிச்சைகளில் இழப்போ அல்லது எந்தவொரு பாதிப்புமோ ஏற்படாது. நீங்கள் இடைநிறுத்த விரும்பும் சந்தர்ப்பத்தில் உடனடியாக எனக்கு தெரியப்படுத்துங்கள்.

 

உங்களுக்கு இந்த ஆய்வு குறித்து ஏதேனும் கேள்வி அல்லது விளக்கம் தேவைப்படின் கீழ்காணும் ஏதேனும் ஒரு அங்கத்துவ மருத்துவருடன் தொடர்பு கொள்ளலாம்;

 

வைத்தியர். காமினி நவரத்ன - 0777383820

வைத்தியர். சந்தன ஜயசுந்தர - 0773753151

பேராசிரியர். ஜெனிபர் பெரேரா - 0776096002

வைத்தியர். ஆனந்த பெரேரா - 0764641031